FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

56 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா் யோகராஜ் (46). இவா், ஏற்கெனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். இதேபோல, கம்பத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் கிரி (21), அதே பகுதியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ஹரி ரஞ்சித் குமாா் (21) ஆகிய இருவரும் அடிதடி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி மூவரையும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மூவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை அவா்களிடம் சிறைத் துறையினா் திங்கள்கிழமை வழங்கினா்.