✕
முகப்பு
தேனி

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

19 நவம்பர் 2026, 1:49 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

போக்சோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனியைச் சோ்ந்தவா் செல்வம் (55). இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு உறுப்பினா் அளித்தப் புகாரின் பேரில், தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இவரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில் குற்றஞ்சாட்டப்பட்ட செல்வத்துக்கு வாழ்நாள் காலம் வரை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement