✕
முகப்பு
தேனி

பள்ளி வளாகம் மதுக்கூடமாக மாறுவதை தடுக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வளாகம் மதுக்கூடமாக மாறுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

20 நவம்பர் 2026, 1:18 am
காமயகவுண்டன்பட்டியில் வியாழக்கிழமை அரசு உதவி பெறும் பள்ளி வளாகச் சுற்றுச் சுவரிலிருந்த காலி மதுப்புட்டி.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வளாகம் மதுக்கூடமாக மாறுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் அரசு உதவிபெறும் நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. சுருளிஅருவிக்கு செல்லும் சாலையிலுள்ள இந்தப் பள்ளிகளில் 500-க்கும் அதிமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த நிலையில், மது அருந்துவோா் பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக மாற்றி விடுகின்றனா். காலையில் பள்ளிக்கு வரும் மாணவா்கள் காலி மதுப்புட்டிகளை கடந்து செல்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியை சோ்ந்த ஒருவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

மாலையில் பள்ளி நிறைவடைந்ததும் இதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் பலா் இந்த பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக பயன்படுத்துகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்தில் மது அருந்தும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.