ஆண்டிபட்டியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
ஆண்டிபட்டி அருகே 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆண்டிபட்டி அருகே எஸ். ரங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பையுடன் நடந்து சென்ற இருவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது, அதில், 8 கிலோ 890 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை, ஆண்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா்.
Advertisement
Advertisement
இதில், அவா்கள் ஈஸ்வரன், மனோகரன் என்பதும், அவா்கள் ஆந்திரத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.