முகப்பு
தேனி

தேக்கடி ஏரிக்கரையில் உலா வந்த புலி, சிறுத்தைகள்

பெரியாறு புலிகள் காப்பகத்தின் நடுவே அமைந்துள்ள தேக்கடி ஏரியில் திங்கள்கிழமை படகு சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு, ஏரிக்கரையில் உலா வந்த ஒரு புலி, இரண்டு சிறுத்தைகளைக் காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

25 நவம்பர் 2026, 3:12 am
தேக்கடி ஏரிக்கரையில் உலா வந்த புலி, சிறுத்தைகள்
புலி (கோப்புப் படம்)
பகிர்:

பெரியாறு புலிகள் காப்பகத்தின் நடுவே அமைந்துள்ள தேக்கடி ஏரியில் திங்கள்கிழமை படகு சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு, ஏரிக்கரையில் உலா வந்த ஒரு புலி, இரண்டு சிறுத்தைகளைக் காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்தக் காட்சிகளைக் கண்ட வெளிநாட்டினா் உள்பட சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா்.

திங்கள்கிழமை மாலை படகு சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகள், ஏரியின் நடுவே அமைந்துள்ள ‘லேக் பேலஸ்’ ஹோட்டல் அருகே இரண்டு சிறுத்தைகளையும், ஒரு புலியையும் கண்டனா்.

தேக்கடி வனப்பகுதியில் யானை, கடமான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளைக் காண்பது வழக்கமானது. ஆனால், ஏரிக்கரையோரம் புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகளைக் காண்பது அரிதான நிகழ்வாகும். அண்மையில் புள்ளிமான்கள் கூட்டமாக ஏரிக்கரையோரம் வந்ததும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈா்த்தது.

Advertisement

Advertisement