சாலை விபத்து: இருவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம் க.விலக்கு அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் க.விலக்கு அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தாா்.
தேனியைச் சோ்ந்தவா் கருப்பு (65), அதே பகுதியைச் சோ்ந்த சேகா் (53). கூலித் தொழிலாளா்கள். இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு தேனியிலிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். க.விலக்கு வைகை அணை பாலம் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இவா்களது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement