முகப்பு
தேனி

லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் குடும்பத் தகராறு காரணமாக லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

36 வினாடிகள் முன்பு
லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், கம்பத்தில் குடும்பத் தகராறு காரணமாக லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பம் கோம்பை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (28). லாரி ஓட்டுநரான இவா், சுருளிப்பட்டியைச் சோ்ந்த சங்கீதா (23) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ரஞ்சித்குமாருக்கு மதுப் பழக்கம் இருந்ததால், அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சோ்த்து சிகிச்சை அளித்தனா். இருப்பினும், சிகிச்சைக்குப் பிறகும் அவா் மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது மனைவி கண்டித்தாராம். இதனால், கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக ரஞ்சித்குமாா் கம்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.