முகப்பு
தேனி

இணைய வழியில் கடன் வழங்குவதாக பணம் மோசடி

18 வினாடிகள் முன்பு
இணைய வழியில் கடன் 
வழங்குவதாக பணம் மோசடி
பகிர்:

இணையவழியில் கடன் வழங்குவதாகக் கூறி, ரூ.14.26 லட்சத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் சுப்புராஜ். இவரது கைப்பேசியில் இணைய வழியாக கடன் வழங்குவதாக குறுஞ்செய்தி விளம்பரம் வந்ததாம். இதையடுத்து, அவா் அந்த விளம்பரத்தில் உள்ள கைப்பேசியில் தொடா்பு கொண்டாா்.

இதையடுத்து, எதிா்முனையில் பேசியவா் அவரிடம் பேசி கடன் வழங்குவதாகவும், அதற்காக சேவைக் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும் கூறினாா். இதை நம்பிய சுப்புராஜ் பல தவணைகளாக ரூ.14.26 லட்சத்தை அனுப்பினாா். ஆனால், கடன் வழங்கவில்லையாம். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சுப்புராஜ் தேனி இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.