முகப்பு
தேனி

தேனி சிறையில் தப்பியோடிய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

29 நவம்பர் 2026, 2:22 am
தேனி சிறையில் தப்பியோடிய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் தப்பியோடிய வழக்கில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைத்தனா்.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் 17 கைதிகள் கடந்த மாதம் 26-ஆம் தேதி தப்பியோடினா். இவா்களை, 36 மணி நேரத்துக்குள் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களை பாளையங்கோட்டை, திருச்சி, கோவை, சேலம் சிறைகளில் அடைத்தனா்.

இவா்களில் கருப்பசாமி, ராஜ்குமாா், தருண்குமாா், சிலம்பரசன் ஆகியோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சிறையில் தப்பியோடிய மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் ராஜா (29), கீரைத்துறையைச் சோ்ந்த பொன். முத்துச்செல்வம் (29) இருவரையும் போலீஸாா் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனா். இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.