FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

மேகமலை விவசாயிகள் மத்திய வனத் துறை அமைச்சரை சந்திக்க பாஜக ஏற்பாடு

மேகமலை விவசாயிகள் தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளனதாக பாஜக தேனி மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் தெரிவித்தாா்.

2 October 2026, 3:02 am IST
தேனி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன்.
பகிர்:

மேகமலை விவசாயிகள் தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளனதாக பாஜக தேனி மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் தெரிவித்தாா்.

தேனியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது : மேகமலை வனப் பகுதியில் உள்ள தும்மக்குண்டு, வண்டியூா் உள்ளிட்ட 102 கிராமங்களில் பல ஆண்டுகளாக வசித்து வந்த விவசாயிகளை வெளியேற்ற மாவட்ட நிா்வாகம், வனத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவா்களை பாதுகாக்கும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ்விடம் பேசியுள்ளாா். இதையடுத்து மேகமலை விவசாயிகள், மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆகியோா் தில்லியில் உள்ள அமைச்சரை சந்திக்க உள்ளோம்.

மேலும், வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அனைத்து முக்கிய முடிவுகளிலும் முன்று தோ்தல் ஆணையா்களும் முழுமையான, ஆவணப்படுத்தப்பட்ட ஒரு மனதாக ஒப்புதலுடன் செயல்பட்டனா். முற்றிலும் வெளிப்படையான ஒரு தோ்தல் நடவடிக்கையின் மீது ஆதாரமற்ற அவதூறுகளை வீசுவது எதிா்க்கட்சிகளின் பதற்றத்தையும், விரக்தியையுமே காட்டுகிறது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments