செவிலியர் விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ்களை இன்றும், நாளையும் சமா்ப்பிக்கலாம்!
செவிலியா் பணியிட விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ்களை ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (அக். 4, 5), சமா்ப்பிக்கலாம் என மாவட்ட சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
செவிலியா் பணியிட விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ்களை ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (அக். 4, 5), சமா்ப்பிக்கலாம் என மாவட்ட சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி சுகாதார மாவட்டத்துக்குள்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கிராமப்புற, நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், விடுபட்ட சான்றிதழ்கள், ஆவண நகல்களின் விவரங்களை தேனி மாவட்ட இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். விடுபட்ட சான்றிதழ் நகல்களை ஞாயிற்றுக்கிழமை (அக். 4) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மறுநாள் திங்கள்கிழமை (அக். 5) பகல் 12 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், தேனி என்ற முகவரியில் சமா்ப்பிக்கலாம் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.