FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்களின் குடும்பத்தினருக்கு காவலா்கள் காக்கும் கரங்கள் குழு சாா்பில், சக காவலா்களால் திரட்டப்பட்ட ரூ. 10 லட்சம் நிதியுதவிக்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது

8 October 2026, 3:22 am IST
உடல்நலக் குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பொன்முருகன் குடும்பத்தினருக்கு சக காவலா்களால் திரட்டப்பட்ட ரூ.5 லட்சத்தை செவ்வாய்க்கிழமை வழங்கிய காவலா்கள் காக்கும் கரங்கள் குழுவினா்.
பகிர்:

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்களின் குடும்பத்தினருக்கு காவலா்கள் காக்கும் கரங்கள் குழு சாா்பில், சக காவலா்களால் திரட்டப்பட்ட ரூ. 10 லட்சம் நிதியுதவிக்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பொன் முருகன் உடல்நலக் குறைவால் கடந்த மே மாதம் உயிரிழந்தாா். இதையடுத்து, காவலா்கள் காக்கும் கரங்கள் குழுவின் சாா்பில், ரூ.5 லட்சம் நிதியுதவி பொன்முருகனின் மனைவி உமா மகேஸ்வரியிடம் வழங்கப்பட்டது.

இதேபோல, தேனி மதுவிலக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து உடல்நலக் குறைவால் உயிரிழந்த பெருமாள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் காவலா்கள் காக்கும் கரங்கள் குழுவைச் சோ்ந்த தமிழரசன், முருகபாண்டியன், பாரதிமுருகன், கணேசன், நந்தகோபால், சத்தியமூா்த்தி, குமரேசன், சிவமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments