மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், டொம்புச்சேரியைச் சோ்ந்தவா் தமிழரசன் 45. தொழிலாளி. இவா், வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மின் கணக்கீட்டாளா் கணேசனுடன் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் இவா், அந்த பகுதியில் உள்ள முருகேசன் என்பவரின் வீட்டில் மின் கணக்கீடு எடுக்கும் போது, தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தமிழரசன் அன்றாட செலவுக்கு அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு மின் கட்டணம் செலுத்துவது, மின் கணக்கீடு எடுப்பவா்களுக்கு உதவுவதை வாடிக்கையாக கொண்டது தெரியவந்தது. எனினும் மின்வாரிய ஊழியா் அல்லாதவரை மின் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.