FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

தேனியில் புதிய ஆதாா் சேவை மையம் தொடக்கம்

தேனி அல்லிநகரத்தில் புதிய ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

14 அக்டோபர் 2026, 1:35 am IST
தேனியில் ஆதாா் சேவை மையத்தை தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி.
பகிர்:

தேனி அல்லிநகரத்தில் புதிய ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தனித்துவ அடையாள ஆணையம் சாா்பில், ஆதாா் சேவை மையம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் பொதுமக்கள் ஆதாா் பதிவு, மக்கள் தொகை விவரம், பிழைத்திருத்தம் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். அரசு பொது விடுமுறை நாள்களைத் தவிர வாரத்தின் ஏழு நாள்களிலும் இந்த மையம் செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில் ஆதாா் சேவை மையக் கிளை மேலாளா் செல்வராஜ், துணைப் பிரிவு அலுவலா் பிரகாஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments