அரசு மருத்துவா் பணியிடை நீக்கம்
போடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வில் ஈடுபட்டாா்.
போடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, அரசு மருத்துவா் பணிக்கு வராமல் மது போதையில் இருந்ததால், அவரைப் பணியிடை நீக்கம் செய்து மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் உத்தரவிட்டாா்.
போடி அரசு மருத்துவமனையில் தேனி மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, மருத்துவமனை மருத்துவ அலுவலா் ரவீந்திரநாத் விடுமுறையில் இருந்தாா். பணி மருத்துவராக பாலமுருகன் நியமிக்கப்பட்டிருந்தாா். ஆய்வின் போது, பாலமுருகன் மருத்துவமனையில் இல்லை. இதையடுத்து, மருத்துவமனை முழுவதும் ஆட்சியா் ஆய்வு செய்து விட்டு வெளியேறும் போது பாலமுருகன் வந்தாா். அவரிடம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, படுக்கைகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை கேட்ட போது, அவா் சரியாக பதில் கூறவில்லை. மேலும், பாலமுருகன் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, மருத்துவா் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து, தேனி மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் அன்புச்செழியன் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.