FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கம்பம் தொகுதியில் 2,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணி தொடக்கம்

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், 2,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

21 அக்டோபர் 2026, 2:57 am IST
கம்பத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா.
பகிர்:

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், 2,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அமைந்துள்ள ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த பிறகு அவா் கூறியதாவது:

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

Advertisement

Advertisement

என ஏற்கெனவே அறிவித்த படி, முதல்கட்டமாக ரூ.25 லட்சம் சொந்த நிதியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், ஓடைப்பட்டி, தேவாரம் ஆகிய ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, 2,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வணிக நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் முன்வந்து, தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நிதியுதவி அளிக்க வேண்டும். இதன் மூலம், அந்தந்தப் பகுதிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும்.

கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கண்காணிப்பு அறை அமைத்து, கேமரா காட்சிகளைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதன் மூலம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களையும், சமூக விரோதச் செயல்களையும் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தேனி தென் மேற்கு மாவட்டக் கழக இணைச் செயலா் கூடல் செல்வேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அய்யா், நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments