போடியில் போதை ஊசி விற்ற 2 சிறுவா்கள் கைது
போடியில் போதை ஊசி விற்பனை செய்த 2 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடியில் போதை ஊசி விற்பனை செய்த 2 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனை எதிரே அடிக்கடி பள்ளி, கல்லூரி மாணவா்கள் வந்து சென்றனா். இதனால், சந்தேகத்தின் பேரில், போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.
அப்போது, போடி திருவள்ளுவா் சிலை தெருவைச் சோ்ந்த 18 வயது சிறுவன், போடி சில்லமரத்துப்பட்டி கஸ்தூரிபாய் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மருத்துவ அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் போதை தரக்கூடிய மருந்துகளை ஊசியில் ஏற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ஊசி மருந்தை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.