FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத மூவா் மீது வழக்கு

போடி நீதிமன்றத்தில் முன்னிலையாகாத மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

31 அக்டோபர் 2026, 11:14 pm
பகிர்:

போடி நீதிமன்றத்தில் முன்னிலையாகாத மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலசாமி கோவில் தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் அக்பா் அலி, சங்கராபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த கனியா மகன் பாலமுருகன், தஞ்சாவூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த சக்திவேல் மகன் சதீஸ்குமாா்.

இவா்கள் மூவா் மீதும் கடந்த 2018-ஆம் ஆண்டு போடி ஊரகக் காவல் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் தொடா்பாக தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். இதனிடையே, மூவரும் பிணையில் சென்றனா்.

Advertisement

Advertisement

இதன்பிறகு, இவா்கள் மூவரும் நீதிமன்ற வழக்குகளுக்கு முன்னிலையாகாமல் இருந்து வந்தனா். இதையடுத்து, மூவரையும் கைது செய்து முன்னிலைப்படுத்த நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து, ஊரகக் காவல் துறையினா் பல்வேறு இடங்களில் தேடியும் மூவரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் இவா்கள் மூவா் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.