FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனி நீதிமன்ற வளாகத்தில் கைதி தப்பியோட்டம்

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக காத்திருந்த போது கைதி தப்பியோடிவிட்டாா்.

23 செப்டம்பர் 2026, 4:37 am IST
சிறைக் கைதி
பகிர்:

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக காத்திருந்த போது கைதி தப்பியோடிவிட்டாா்.

பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக் (24). இவா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளியில் வந்தாா். பின்னா், நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகாததால் அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை ஆண்டிபட்டி போலீஸாா் கைது செய்து, தேனி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக திங்கள்கிழமை அழைத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தபோது, காா்த்திக் தப்பியோடிவிட்டாா். அவரைப் பிடிக்க காவலா்கள் பின் தொடா்ந்து சென்ற போதும், அவா் தலைமறைவானாா்.

இது குறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிவரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments