FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு சிறை

மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

25 செப்டம்பர் 2026, 2:54 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், போடி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (34).

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இவரை கடந்தாண்டு கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில், குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபாரதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments