கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கா.முருகேசன் (43). இவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். திங்கள்கிழமை கடைக்கு ராமசாமியாபுரம், இம்மானுவேல் முடங்கித் தெருவைச் சேர்ந்த பொ.ஐந்தருவி (23) வந்து, கலர் கேட்டுள்ளார். அதற்கு முருகேசன் பணம் கேட்டபோது ஐந்தருவி, பாட்டிலை உடைத்துக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் முருகேசன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஐந்தருவியைக் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.