தி.மு.க. தெருமுனை பிரசாரம்
விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ராஜபாளையம் நகர தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கும் நமக்கு நாமே சுற்றுப்பயண விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் ராஜபாளையத்தில் நடைபெற்றன.
விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ராஜபாளையம் நகர தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கும் நமக்கு நாமே சுற்றுப்பயண விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் ராஜபாளையத்தில் நடைபெற்றன.
மதுரை ராஜா கடைத்தெரு, ஜவகர் மைதானம், அம்பல புளி பஜார், மலையடிபட்டி நான்கு முக்கு ரோடு, பழைய பேருந்து நிலையம், சர்ச் அருகே ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு நகர செயலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனுஷ்குமார், துணை அமைப்பாளர் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்.
அவைத்தலைவர் ஜமால், நகர துணை செயலர்கள் மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தனுஷ்கோடி, மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ராஜபாளையம் நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.