நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
ராஜபாளையம் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி செப்டம்பர் 29இல் நடைபெற உள்ளது.
ராஜபாளையம் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி செப்டம்பர் 29இல் நடைபெற உள்ளது.
கொட்டகை அமைத்தல், தீவனம் மற்றும் பராமரிப்பு முறை, நோய் தடுப்பு முறை, விற்பனை வாய்ப்பு குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பெயரை செப்டம்பர் 28 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 04563 220 244 எண்ணிலோ, நேரிலோ பதிவு செய்யவேண்டும்.
Advertisement
Advertisement
முதலில் வரும் 25 நபர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்க உள்ளதால் முன்பதிவு அவசியம். கால்நடை வளர்ப்போர், தொழில் முனைவோர், இளைஞர் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மைய தலைவர் தனசீலன் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.