FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விருதுநகரில் ரயில்வே மேம்பாலம் கட்ட பூமி பூஜை

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

 விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட, 2008 இல் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.வரதராஜன் ரூ.36 கோடி நிதியை பெற்றுத்தந்தார். 610 மீட்டர் நீளமும், 8.5 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் சேவைச்சாலையுடன் அமைக்க ரூ.12.78 கோடி, ரயில்வே துறையினருக்கு ரூ.2.5 கோடி, நிலம் கையப்படுத்த ரூ.8.00 கோடி என பிரித்து ஒதுக்கப்பட்டது. மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் பாலம் கட்டும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

 இந்நிலையில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிபதி மகாதேவன் பிப்.25 இல் உத்தரவிட்டார். இதையடுத்து, மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை அரசு தலைமை மருத்துவமனை அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விருதுநகர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் (கிராமப்புற சாலைகள், நபார்டு) மணிமாறன்,  உதவி பொறியாளர் ராஜசேகரன்,  ஒன்றியக் குழுத் தலைவர் கி. கலாநிதி, நகர்மன்ற உறுப்பினர் முகமது நெய்னார் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments