FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கிராமங்களுக்கு தூய்மை மதிப்பீடு ரதம் வருகை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் தூய்மை குறித்து மதிப்பிடுவதற்காக தூய்மை பாரத இயக்கத்தின் தூய்மை

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:05 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் தூய்மை குறித்து மதிப்பிடுவதற்காக தூய்மை பாரத இயக்கத்தின் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதம் வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.
  ரதத்தை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
  அப்போது ஆட்சியர் கூறியதாவது:  மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், கிராமங்களில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளது. 
  பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார வளாகங்கள், கிராமச் சந்தை, வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களுக்கு இந்த வாகனத்தில் செல்லும் குழுவினர் அப்பகுதியின் தூய்மை குறித்து மதிப்பீடு செய்வர்.
 மேலும் பொது மக்களிடமிருந்து கிராமத்தின் தூய்மை நிலை, கழிவறை பயன்பாடு, குப்பைகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்படும்.  இதன் மூலம் சிறந்த மாவட்டம் மற்றும் மாநிலத்துக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. 
   கிராம ஊராட்சிகளில், சேவை அளவிலான முன்னேற்றத்திற்கு 35 சதவீதம், பொது இடங்களில் தூய்மை குறித்த நேரடி கள ஆய்வு மூலம் 30 சதவீதம், கிராமப் பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் 35 சதவீதம் என்ற வகையில் 100 சதவீதம் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. கிராமங்களுக்கு இக்குழுவினர் வரும்போது பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூய்மை கணக்கெடுப்பு ரதம் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார அளவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்ல இருக்கிறது. இது தொடர்பாக எஸ்.எஸ்.ஜி. என்ற செல்லிடபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தங்கள் பகுதி சுகாதாரம் குறித்து பொதுமக்கள் அரசுக்கு தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் என்றார் அவர். முன்னதாக தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் கணக்கெடுப்பு தொடர்பான கையேட்டினை  ஆட்சியர் வெளியிட, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சுரேஷ் பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகளை அரசு வாகனங்களில் ஆட்சியர் ஒட்டினார்.
    இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments