FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சகோதரர்களுக்கிடையே தகராறில் இருவர் காயம்: 9 பேர் மீது வழக்கு

சிவகாசியில் சொத்து பிரச்னையில் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் காயமடைந்தனர். இதில், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

சிவகாசியில் சொத்து பிரச்னையில் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் காயமடைந்தனர். இதில், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சிவகாசி-திருத்தங்கல் சாலையில் தினசரி காலண்டர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர்கள் வெற்றிராஜன் (61) மற்றும்  ஹரிராம் (58). இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கிடையே சொத்து பிரச்னை உள்ளதாம்.
   இந்நிலையில், ஹரிராம் மற்றும் அவரது மகன் ராஜமுருகன் நிறுவனத்தில் இருந்தபோது, வெற்றிராஜன் மற்றும் 7 பேர் அத்துமீறி நுழைந்து ஹரிராமை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதையடுத்து, ஹரிராமும், ராஜமுருகனும் சேர்ந்து வெற்றிவேலை தாக்கினராம். இதில், ஹரிராம் மற்றும் வெற்றிராஜன் காயமடைந்தனர்.
    இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் ராஜமுருகன், ஹரிராம், வெற்றிராஜன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments