FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாழ்வாங்கி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் வாழ்வாங்கி கிராமத்தில் சாலை, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் வாழ்வாங்கி கிராமத்தில் சாலை, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியநாயகிபுரம் கிராம ஊராட்சிக்கு உள்பட்டஇக்கிராமத்தில் 1,200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திலுள்ள தெருக்களில் போதிய மின்விளக்குகள் இல்லை. ஊருக்குள் 
செல்லும் பிரதான தார் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. 
மேலும், இக்கிராமத்தில் வாருகால் வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்களது வீட்டருகே குழி தோண்டி கழிவுநீரை விடுகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவி வருகிறது.
    தங்களது கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரும்படி ஊராட்சி அலுவலகத்தில் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். 
எனவே, இக்கிராமத்தில் வாருகால், சாலை, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தரவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments