FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேண்டுராயபுரம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கத் தடை கோரி மனு: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பரிசீலிக்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம், வேண்டுராயபுரம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தெற்கு ரயில்வே

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

விருதுநகர் மாவட்டம், வேண்டுராயபுரம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சி.சுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 மதுரை-செங்கோட்டை ரயில் பாதை வேண்டுராயபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த ரயில் பாதையைக் கடந்து தான் எங்கள் ஊருக்கு சென்று வருகிறோம். இந்நிலையில் இங்கு சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தச் சுரங்கப் பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் ஊர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுரங்கப் பாதை அமைக்கப்பட்டால் மழைக் காலத்தில் இருசக்கர வாகனம் கூட செல்லமுடியாத நிலை ஏற்படும். மேலும், விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் டிராக்டர் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும்.
 மேலும், இந்த வழித்தடத்தில் தினசரி 8 ரயில்கள் மட்டுமே சென்று வருகின்றன. சுரங்கப் பாதையில் செல்லாமல் மாற்றுப் பாதை வழியாக செல்ல வேண்டும் என்றால் 25 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு நேர விரயம் ஏற்படும். எனவே வேண்டுராயபுரம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஸ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து நான்கு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments