FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே பொதுக் கழிப்பிடம் அமைத்துத் தர கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியில் பொதுக் கழிப்பிடம் அமைத்துத் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 5:14 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியில் பொதுக் கழிப்பிடம் அமைத்துத் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     இது குறித்து தமாகா கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலர் க. துள்ளுக்குட்டி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: 
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியில் பொதுத் துறை வங்கி, மாவட்டக் கூட்டுறவு வங்கி, துணை ஆரம்ப சுகாதார மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிளை நூலகம், கால்நடை மருத்துவமனை, மாரியம்மன் கோயில் உள்ளிட்டவை உள்ளன. எனவே, இங்கு நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
    இந்நிலையில், பெருமாள்தேவன்பட்டியில் பொதுக் கழிப்பிடம் இல்லை. இதனால், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கும், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கும் இடையேயுள்ள சந்தில் பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருவதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. 
    எனவே, பெருமாள்தேவன்பட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் சுகாதார வளாகம் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments