FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராஜபாளையத்தில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தக் கோரிக்கை

ராஜபாளையத்தில்  அனைத்து வார்டுகளிலும்  உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

ராஜபாளையத்தில்  அனைத்து வார்டுகளிலும்  உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் நகாராட்சியில் தென்காசி சாலையில் உள்ள அங்கையராஜா தெருவின் முன்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் பல நாள்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் முறையாக சுகாதார மேம்பாட்டுப் பணிகளைச் செய்து, கழிவுநீர் வாய்க்காலை துப்புரவு செய்ய வேண்டும். 
மேலும் கொசு மருந்தை முறையாக தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments