ராஜபாளையம் அருகே சொத்துத் தகராறில் தாய் கொலை: மகன் கைது
ராஜபாளையம் அருகே சொத்துப் பிரச்னையில் தாயைக் கொலை செய்த மகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே சொத்துப் பிரச்னையில் தாயைக் கொலை செய்த மகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் நடராசன். கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இவர் இறந்துவிட்டார். இறக்கும் நிலையில் தனது மனைவி பார்வதியம்மாள், மகன்கள் சிவகாமி நாதன், புதுராஜன் மற்றும் மகாலிங்கம் ஆகியோருக்கு தலா ரூ. 3 லட்சம் பணமும், குடியிருக்கும் சொந்த வீட்டையும் பிரித்து கொள்ளுமாறு கூறினாராம்.
பனை ஏறும் தொழிலாளியான மூத்த மகன் சிவகாமிநாதன், தனக்கு உரிய பங்கு பணத்துடன் வீட்டையும் கேட்டு தனது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமையும் இதுகுறித்து தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிவகாமிநாதன் அரிவாளால் தாய் பார்வதியம்மாளை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பார்வதியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சிவகாமிநாதன் சேத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் பார்வதியம்மாள் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸார், சிவகாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.