அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலய ஆனி பிரம்மோற்ஸவத் விழாவில் திங்கள்கிழமை இரவு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலய ஆனி பிரம்மோற்ஸவத் விழாவில் திங்கள்கிழமை இரவு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
கி.பி.1216 ஆம் ஆண்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 14 நாள்கள் ஆனிமாத பிரம்மோற்சவத் திருவிழா நடைபெறும். அதன்படி திருவிழா நடைபெற்று வந்த நிலையில்,திங்கள்கிழமை மீனாட்சித் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாலை சுமார் 5.30 மணிக்குத் தொடங்கிய திருக்கல்யாண நிகழ்ச்சியில் மீனாட்சியின் தந்தையான மலையத்துவஜ பாண்டிய மன்னன், சொக்கநாதரிடம் மீனாட்சியைக் கன்னிகா தானம் செய்யும் நிகழ்ச்சியும் அதனையடுத்து சுவாமியின் காசி யாத்திரை கிளம்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
பின்னர் சுவாமிக்கு பாதபூஜை செய்து, ஊஞ்சலில் தாலாட்டி மீனாட்சி தேவியை திருமணம் செய்ய தயார் செய்தனர். இரவு சுமார் 7.30 மணிக்கு புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க, மாலை மாற்றிக்கொண்டு மீனாட்சிக்கு சொக்கநாதப் பெருமான் திருமாங்கல்யம் சூட்ட திருக்கல்யாண நிகழ்ச்சி யாக நவடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மணக்கோலத்தில் மீனாட்சி சொக்கநாத சுவாமி தம்பதி சமேதராய் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்நிகழ்ச்சியில் சுமார் 5000க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இவ்விழா பாதுகாப்பில் சுமார் 100க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.