மடத்துப்பட்டியில் நாளை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில் அமைப்பு சாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்
வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில் அமைப்பு சாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 30) நடைபெற உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்தார்.
இதுக்குறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டி சமுதாய கூடத்தில் சனிக்கிழமை (ஜூன் 30) அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை நல வாரியத்தில் பதிவு செய்யாத கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள், இதில் கலந்து கொண்டு தங்களை உறுப்பினராக பதிவு செய்து பயன் பெறலாம். மேலும், தொழிலாளர்கள் தங்களை வாரியத்தில் பதிவு செய்வதற்கான வழி முறைகள், நலத்திட்ட உதவிகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2650 இல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.