சிவகாசி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை
சிவகாசி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப்பிரிவில் போதிய பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப்பிரிவில் போதிய பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் மாதம்தோறும் சுமார் 180 முதல் 200 வரை குழந்தைகள் பிறக்கின்றன. இங்கு பணியாற்றிய மருத்துவர் விடுப்பில் சென்று 15 நாள்களாகிவிட்டது. இதனால் செவியர்களே பிரசவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மகப்பேறு பிரிவில் போதிய பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரகலாதன் கூறியது: ஏற்கெனவே பணியில் இருந்த பெண் மருத்துவர் மகப்பேறு விடுப்பில் சென்று விட்டார். மே 25ஆம் தேதி முதல் திருத்தங்கல் அரசு மருத்துவமனையிலிருந்து ஒரு பெண் மருத்துவர், சிவகாசி அசசு மருத்துவமனைக்கு வர உள்ளார். சிவகாசி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க 3 பெண் மருத்துவர்கள் தேவை. இதுகுறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.