காமராஜர் விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா
சென்னையில் ஆசிரியர் தினத்தன்று தமிழக அரசு வழங்கிய காமராஜர் விருது பெற்ற ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் ஆசிரியர் தினத்தன்று தமிழக அரசு வழங்கிய காமராஜர் விருது பெற்ற ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் கடந்த 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறப்பிடம் பெற்று, தமிழக அரசின் காமராஜர் விருதும், ஊக்கத் தொகை ரூ.20, 000 -ம், நற்சான்றிதழும் பெற்ற மாணவர் ஆர்.மணிகண்டனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும் 30 நொடியில் அதிகவேகம், 30 நொடியில் ஒரு குதியில் இரு முறை சுற்றுவது, 3 நிமிடம் அதிக கயிறு தாண்டுதல் ( ஸ்கிப்பிங்), 45 நொடிக்குள் பல வகைத் திறன்களை வெளிப்படுத்துதல் என்ற நான்கு நிலைகளில் இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் கிருஷ்ணகிரியில் நடத்திய போட்டியில் இப் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவி எஸ்.தர்ஷிணி, 17 வயதிற்குட்பட்டோர் போட்டியில் வெற்றி பெற்று, தமிழக அணிக்காக தேர்வு பெற்றார். அக்டோபர் மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் தேசிய போட்டியில் தமிழக அணியில் இவர் விளையாடுகிறார். சிறப்பிடம் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ மாணவியரைப் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா, அறக்கட்டளை உறுப்பினர்
என்.கே.ராம்விஷ்ணு ராஜா, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் பாராட்டிக் கெளரவப்படுத்தினர். பள்ளித் தலைமையாசிரியர் பி.ஏ.ரமேஷ், உடற்கல்வி இயக்குநர் எஸ்.வி.வெங்கடேசன் ஆகியோரும் மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.