தெற்காசிய ஜூனியர் ஐன்ஸ்டீன் விருதுக்கான கண்காட்சி: ஸ்ரீவிலி. லயன்ஸ் பள்ளி மாணவிகள் இலங்கை பயணம்
தெற்காசிய அளவில் இலங்கையில் நடைபெறும் ஜூனியர் ஐன்ஸ்டீன் விருதுக்கான கண்காட்சி போட்டியில் கலந்து கொள்ள தேர்வான
தெற்காசிய அளவில் இலங்கையில் நடைபெறும் ஜூனியர் ஐன்ஸ்டீன் விருதுக்கான கண்காட்சி போட்டியில் கலந்து கொள்ள தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை விமானம் மூலம் மதுரையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
இன்றைய வாழ்வின் தேவைகளுக்கு அறிவியல் பூர்வமான தீர்வுகள் என்ற தலைப்பில் இலங்கையைச் சேர்ந்த சினர்ஜி டெக்னாலஜி என்ற நிறுவனம், ஜூனியர் ஐன்ஸ்டீன் விருதுக்கான போட்டிகளை மதுரை மண்டல அளவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் கடந்த ஜூலை 27 இல் நடத்தியது.
இதில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியைச் சேர்ந்த இரு குழுக்கள் வெற்றி பெற்று தெற்கு ஆசியா அளவில் இலங்கையில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் ரித்திஷா சந்தோஷி, நிவேதா, மோனா அஸ்வின், நந்தினி, அனு அவந்திகா, ஸ்ரீனிவாசவி ஆகியோர் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இலங்கை, கொழும்பில் உள்ள என்.எஸ்.பி.எம். பசுமை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ள வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டனர்.
இவர்களுடன் ஆசிரியை ராமலட்சுமியும் செல்கிறார். இவர்கள் மதுரையிலிருந்து விமானம் மூலம் கொழும்பு செல்கிறார்கள். இவர்களுக்கு வழியனுப்பு விழா பள்ளியின் தாளாளர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வர் அ.சுதாகரன், துணை முதல்வர் டி.முத்துக்குமார் மற்றும அரிமா சங்கத்தினர் இவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.