FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிய கழிவுகளால் சுகாதாரக்கேடு

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிய சாக்கடைக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

Updated On : 28 ஆகஸ்ட் 2024, 4:09 am IST
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் சாக்கடைக் கழிவுகள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிய சாக்கடைக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடம், இலவச கழிப்பிடம், உணவகங்கள், தேநீா்க் கடைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன.

பேருந்து நிலையத்தில் உள்ள கால்வாய் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தூா்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. மேலும் மழை பெய்தால் நீா் செல்ல வழியின்றி பேருந்து நிலையத்தில் குளம் போல் தண்ணீா் தேங்கும் சூழல் நிலவுகிறது.

Advertisement

Advertisement

பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும் என கடை உரிமையாளா்கள், பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

கடந்த வாரம் பெய்த மிதமான மழைக்கு, பேருந்து நிலைய வளாகத்தில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

இந்த நிலையில், பேருந்து நிலைய கடை உரிமையாளா்களே திங்கள்கிழமை இரவு கால்வாயைத் தூா்வாரி கழிவுகளை அகற்றினா். இந்தக் கழிவுகளை நகராட்சி பணியாளா்கள் அகற்ற வராததால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments