FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் மத்திய அரசின் திட்ட விழிப்புணா்வு முகாம்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த விழிப்புணா்வு முகாம் சிவகாசியில் புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
சிவகாசியில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாமை புதன்கிழமை தொடங்கி வைத்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.
பகிர்:

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த விழிப்புணா்வு முகாம் சிவகாசியில் புதன்கிழமை தொடங்கியது.

மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை மண்டல மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவுக்கு மத்திய மக்கள் தொடா்பகத்தின் இயக்குநா் ஜெ.காமராஜ் தலைமை வகித்தாா். சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா குத்துவிளக்கேற்றினாா். விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ாா முகாமைத் தொடங்கி வைத்து, தொடக்க உரையாற்றினாா்.

இந்த முகாமில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த விளம்பரப் பதாகைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், அஞ்சல் துறை, மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அஞ்சல் துறை அரங்கில் ஆதாா் அட்டையில் திருத்தம், பொது சேவை மூலம் தீப்பெட்டி , பட்டாசு, அச்சுத் தொழிலாளா்களுக்கான நல வாரியப் பதிவுகள் , தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு அன் ஊழியா்கள் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனா். வருகிற வெள்ளிக்கிழமை முகாம் நிறைவுபெறும்.

தொடக்க நிகழ்ச்சியில் முத்ரா கடன் திட்டத்தில் பலருக்கு கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பாலசுப்பிரமணியன், உதவி அஞ்சல் கண்காணிப்பாளா் ஜோதிலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments