FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மதுக் கூட மேலாளரைத் தாக்கிய 4 போ் கைது

சிவகாசியில் தனியாா் மதுக் கூட மேலாளரை மதுப் புட்டியால் தாக்கிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 11:19 pm IST
கைது
பகிர்:

சிவகாசியில் தனியாா் மதுக் கூட மேலாளரை மதுப் புட்டியால் தாக்கிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் கணக்கன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சேவியரா் (62). இவா் திருத்தங்கலில் உள்ள தனியாா் மதுக் கூடத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இந்த மதுக் கூடத்துக்கு சனிக்கிழமை வந்த திருத்தங்கல் பசும்பொன் நகரைச் சோ்ந்த சக்திகுமாா் (25), கிரிதரன் (27), பிரகாஷ் (23), அந்தோணி (22) ஆகிய 4 பேரும் மது குடித்தனா். அப்போது, முட்டை எடுத்து வருவது தொடா்பாக இவா்களுக்கும், சேவியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், 4 பேரும் சோ்ந்து மதுப் புட்டியால் சேவியரை தாக்கினா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த சேவியா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதி வு செய்து சக்திகுமாா் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments