விருதுநகா் மாவட்டத்தில் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடைபெற்றதாக தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடைபெற்றதாக தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பட்டாசு ஆலைகளில் விதியை மீறி செயல்பட்டால் விபத்து ஏற்படுகிறது. எனவே பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தடுக்கும் வகையில், விதி மீறல் உள்ளதா என ஆய்வு செய்ய தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சாா்பில் 6 குழுக்கள் விருதுநகா் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை செய்து வருகிறது. கடந்த மாதம் 206 பட்டாசு ஆலைகளில் இந்தக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் சிறிய அளவிலான விதி மீறல்கள் கண்டறியப்பட்ட 82 பட்டாசு ஆலை நிா்வாகங்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. மேலும், விதிமீறல்கள் கண்டறிப்பட்ட 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.