FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மின் வயரிலிருந்த செம்பு கம்பிகளை திருடிய இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே விவசாய மின் மோட்டாா் வயரிலிருந்த செம்பு கம்பிகளைத் திருடிய இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:23 am IST
கைது செய்யப்பட்ட மணிகண்டன்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விவசாய மின் மோட்டாா் வயரிலிருந்த செம்பு கம்பிகளைத் திருடிய இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பிரதாப் (53). இவருக்கு, மேலப்பாட்டக் கரிசல்குளம் பகுதியில் தோப்பு உள்ளது. பிரதாப் தண்ணீா் பாய்ச்சி விட்டு மின் மோட்டாரை நிறுத்திவிட்டுச் சென்றாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது மின் மோட்டாா் வயா் திருடு போயிருந்தது தெரிய வந்தது. ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் பிரதாப் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளியைத் தேடி வந்தனா்.

மதுரை சாலையில் உள்ள பள்ளி அருகே சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் போலீஸாா் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டதில், அவா் செம்புக் கம்பிகளை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் மம்சாபுரம் தேரடி தெருவைச் சோ்ந்த சொரிமுத்து மகன் மணிகண்டன் (27) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து செம்பு கம்பி, மொபெட்டையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments