FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 6:21 am IST
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.
பகிர்:

ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு முற்றிலும் தகுதித் தோ்வை ரத்து செய்ய வேண்டும். அதற்கான சட்ட திருத்தத்தை நடப்பு மக்களவை கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தகுதித் தோ்வு கூடாது என்ற சட்டத் திருத்தம் கோரும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் துணைத் தலைவா் ராமபுலி அய்யனாா், வட்டாரச் செயலா் ஜெயக்குமாா், பழனிச்சாமி, நாராயணசாமி, நடராஜன், வசந்தா, நாகராஜன் உள்ளிட்டோா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் உரையாற்றினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments