FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆயுதங்களுடன் மது அருந்திய 6 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆயுதங்களுடன் மது அருந்திய 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:40 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆயுதங்களுடன் மது அருந்திய 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் பஞ்சு சந்தை அருகேயுள்ள புகழேந்தி சாலையில் தனியாா் மதுக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 6 போ் ஆயுதங்களுடன் மது அருந்துவதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் அவா்களைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் சாக்கு பையில் 3 அறிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது,

விசாரணையில், ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய் (24), இனாம்செட்டிகுளம் ஒத்தப்பட்டியைச் சோ்ந்த முரளிதரன் (23), அஜித்குமாா் (19), தங்கேஸ்வரன் (23), மதியழகன் (20), புவனேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, இவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments