ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவம் நிறைவு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரவார ஊஞ்சல் சேவை நடைபெறும். இதில் குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் எழுந்தருள்வா். ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவத்தில் தெற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
நிகழாண்டு ஐப்பசி ஊஞ்சல் உத்ஸவம் கடந்த வியாழக்கிழமை மாலை தொடங்கியது. 7 நாள்கள் நடைபெற்ற ஊஞ்சல் உத்ஸவத்தில் தினசரி மாலை ஆண்டாள், ரங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
7-ஆம் நாள் விழாவான புதன்கிழமை ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆண்டாள், ரங்கமன்னாா் உடன் தான் அவதரித்த ஆடிப்பூர நந்தவனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.