ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவம் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவத்தில் முதல் நாளான வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அருள்பாலித்த ஆண்டாள், ரங்கமன்னாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவத்தில் முதல் நாளான வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அருள்பாலித்த ஆண்டாள், ரங்கமன்னாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா், அக். 29: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரவார ஊஞ்சல் சேவை நடைபெறும். இதில் குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் எழுந்தருள்வாா். இதேபோல, ஐப்பசி மாத ஊஞ்சல் உத்ஸவத்தில் தெற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி ஊஞ்சல் உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை நிறைவடைந்து தெற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் எழுந்தருளினா். இதன் பிறகு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
7 நாள்கள் நடைபெறும் ஊஞ்சல் உத்ஸவத்தில் தினசரி மாலை ஆண்டாள், ரங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி அருள்பாலிப்பா். வருகிற நவம்பா் 4- ஆம் தேதி ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உத்ஸவம் நிறைவடையும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.