FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடக்கம்

காா்த்திகை முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினா்.

21 வினாடிகள் முன்பு
ராஜபாளையம் பந்தளராஜா விநாயகா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்.
பகிர்:

காா்த்திகை முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினா்.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை 1-ஆம் தேதி முதல் 48 நாள்கள் மண்டல பூஜையும், அதன் பிறகு மகர விளக்கு பூஜையும் நடைபெறும். இதையொட்டி, ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

ராஜபாளையம் பந்தளராஜா ஐயப்ப பக்தா் விநாயகா் கோவில், சக்தி விநாயகா் கோவில், சொக்கா் கோவில், அய்யனாா் கோயில், ராஜபாளையம் அருகே அமைந்துள்ள புதூா் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தா்கள் அதிகாலை முதல் மாலை அணிந்து தங்கள் விரதத்தை துவங்கினா்.

Advertisement

Advertisement