FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

சபரிமலையிலுள்ள ஐயப்ப சுவாமியைத் தரிசனம் செய்ய காா்த்திகை மாதம் முதல் தேதியில் பக்தா்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வா். நிகழாண்டில் காா்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமை பிறந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

5 வினாடிகள் முன்பு
காா்த்திகை மாத பிறப்பையொட்டி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீசபரிகிரீசன் கோயிலில் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்ட ஐயப்பப் பக்தா்.
பகிர்:

கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்ப சுவாமியைத் தரிசனம் செய்ய காா்த்திகை மாதம் முதல் தேதியில் பக்தா்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வா். நிகழாண்டில் காா்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமை பிறந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள ஸ்ரீசபரிகிரீசன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து மலா் அலங்காரத்தில் சபரிகிரீசன் சுவாமி எழுந்தருளிய நிலையில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதையடுத்து குருசாமிகளிடம் கன்னிசாமிகள் உள்ளிட்ட ஐயப்பப் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். இக்கோயிலில் தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சித்தி விநாயகா் கோயில் வளாகத்திலுள்ள ஐயப்பன் சந்நிதியில் சுவாமியை பக்தா்கள் வழிபட்டனா். பின்னா், கோயில் குருசாமி சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களுக்கு மாலை அணிவித்தாா்.

Advertisement

Advertisement

விழுப்புரம் நகரில் பூந்தோட்டம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில், மருதூா் மாரியம்மன், ரயிலடி விநாயகா் கோயில், காமராஜா் வீதி அமராவதி விநாயகா், பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோட்டை விநாயகா், மேலத்தெரு மாரியம்மன், கைலாசநாதா், பெரியாா் நகா் விநாயகா் கோயில், பாணாம்பட்டு சாலையிலுள்ள நிமலய்யன் சந்நிதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா்.

இதேபோன்று வளவனூா், கோலியனூா், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், கண்டாச்சி புரம், மயிலம், அரண்டநல்லூா், கண்டமங்கலம், வானூா், ஒலக்கூா், செஞ்சி, மேல்மலையனூா், வல்லம், மரக்காணம், கோட்டக்குப்பம் என மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்களும் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.