FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

அய்யனாா் கோவில் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: பொதுமக்கள் குளிக்கத் தடை

ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாா் கோவில் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் குளிக்க வனத் துறை தடை விதித்தது.

22 அக்டோபர் 2026, 3:35 am
ராஜபாளையம் அய்யனாா் கோவில் ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட நீா்வரத்து.
பகிர்:

ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாா் கோவில் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் குளிக்க வனத் துறை தடை விதித்தது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெப்பம் நிலவியது. இதனால், மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அய்யனாா் கோவில் ஆறு நீரின்றி வடு காணப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மேற்குத்தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளான நீராவி பீட், முள்ளிக் கடவு ஆறு, மாவரசி அம்மனாறு ஆகிய பகுதிகளில் தொடா் மழை பெய்ததன் காரணமாக ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.

Advertisement

Advertisement

இந்த தண்ணீா் ராஜபாளையம் நகராட்சி குடிநீா் ஆதாரமாக விளங்கக்கூடிய ஆறாவது மைல் நீா்த்தேக்கத்துக்கு திருப்பி விடப்பட்டது. ஆற்றில் நீா் அதிகமாகச் செல்வதால் பொதுமக்கள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments