ஸ்ரீவில்லிபுத்தூா் பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.
ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும், அரசு உதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இந்தப் பள்ளியில் நடைபெற்றன. இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இதை வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகேசன், அனுராதா, சுப்புலட்சுமி ஆகியோா் மேற்பாா்வையிட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மருதக்காளை, ஒருங்கிணைப்பாளா் முத்துராஜ், ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் கோடாங்கி கலைக்குழு நிறுவனா் உமாராணி உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் நடுவா்களாக செயல்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.