புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அம்பலபுளி கடைவீதி சிவகாமிபுரம் தெருவில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாக்கு பையுடன் சந்தேகத்து இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து பொலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பி.எஸ்.கே. பாா்க் தெருவைச் சோ்ந்த ராஜரத்தினம் மகன் உதயசூரியன் (44) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 17 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.